
அன்றாட வாழ்வில் வேலையை எளிமையாக்கும் பல விஷயங்களை மக்கள் கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அது போன்ற வீடியோக்களை ரசித்து மக்கள் கண்டு மகிழ்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம்- இல் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வெங்காயம் ஒன்றை பொடி பொடியாக குறைந்த நேரத்தில் நேர்த்தியாக கட் செய்வது எப்படி என்பது குறித்த விளக்கமான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு அது காண்போரை கவர்ந்துள்ளது.
அதில், வெங்காயத்தின் கீழ்புறம் மற்றும் மேற்புறத்தில் முதலில் கத்தியால் வெட்டாமல் அதை நேராக வைத்து சுற்றிலும் கத்தியால் கீறிட்டு பின்பு அதை கிடை மட்டமாக வைத்து வெட்டும்போது அது பொடி பொடியாக நறுக்கப்படுகிறது. இது மிக சுலபமான முறையில் வெங்காயம் வெட்டுவதாக இருப்பதாக அந்த வீடியோவை பார்த்தவர்கள் கமெண்டில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram