
பாகிஸ்தான் அணி தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் டெஸ்ட் தொடரை இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அணியின் வீரர் அலி கான், பாகிஸ்தானை பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் பிட்னஸ் என நான்கு துறைகளிலும் வீழ்த்தும் திறன் தங்களுக்கு இருப்பதாக உறுதியாக தெரிவித்துள்ளார்.
அலி கான் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவர்களை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன். தற்போது அழுத்தத்தில் இருப்பது அவர்கள் தான். நாங்கள் அழுத்தமின்றி விளையாடுவோம். இந்த போட்டியை மற்றொரு போட்டியாகவே கருதுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அணியின் இந்த நம்பிக்கை வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் அணி தற்போது கடும் நெருக்கடியில் இருப்பதால், அமெரிக்க அணியின் இந்த சவால் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.