
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் யோகி பாபு. இவர் “கஜானா” திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் யோகி பாபு கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர் ராஜா யோகி பாபுவை விமர்சித்திருந்தார். இது இணையத்தில் வைரலான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து “ஜோரா கையத்தட்டுங்க” படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் யோகி பாபு அதன் பட விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது இணையத்தில் பரப்பப்பட்ட பொய்யான செய்தி குறித்து பேசினார். அதில் ”யார் வேணாலும் என்ன வேணாலும் பேசலாமா…. கடந்த 3 வருடங்களாக என்னிடம் உதவியாளராக வேலை பார்த்து வரும் ஒருவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தில் தன்னை 2 நாட்கள் நடித்து தரும்படி கூறினார். அவருக்காகவே நான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் 7 லட்சம், 8 லட்சம் கொடுத்தால் தான் பட விழாவில் கலந்து கொள்வேன் என்று என்னைப் பற்றி பேசினார்கள். இது என்னுடைய படம்…நான் வரவில்லை என்றால் அது தப்பு… எனக்கு எவ்ளோ பேரு பணம் தர வேண்டும் என்று தெரியுமா? உங்களால் அந்த பணத்தை வாங்கி தர முடியும் என்று கூறினால் நான் லிஸ்ட் தருகிறேன்… இப்படி விமர்சித்து பேசாதீர்கள்… எல்லாரும் தன் கடந்த காலத்தை நினைத்து பார்க்க வேண்டும். பேசுறவங்க பேசட்டும்… கடவுள் பார்த்துப்பான்” என்று கூறினார்.
அதோடு எனது நடிப்பிற்கு எவ்வளவு சம்பளம் என்று கூட எனக்கு தெரியாது. மற்றவர்கள் தான் அதை தீர்மானிக்கிறார்கள். எனவே தயாரிப்பாளர்கள் நல்ல கதையுடன் வந்தால் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.