
முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாதக தலைவர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விருப்பம் உள்ளோர் ஹிந்தியை கற்றுக் கொள்ளட்டும், எதற்கு திணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தாய் மொழி தான் கொள்கை மொழி தொடர்பு மொழிக்கு ஆங்கிலம் உள்ளது. ஒரு மொழியை திணித்தால் இந்தியா பல நாடுகளாக மாறும் என்று அவர் விமர்சித்துள்ளார்.