ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், அண்ணன் வெல்லமண்டி நடராஜன் சொன்னார். திருச்சி, தஞ்சை என்றெல்லாம் சொன்னார்.  அண்ணன்  உடனே  கேட்டார் தேனி, மதுரை எல்லாம் விட்டுவிட்டீர்கள் என்று சொன்னார்கள்…

தேனி மட்டுமல்ல, மதுரை மட்டுமல்ல, தென்காசி மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மட்டுமல்ல….  நம்மை பொருத்தவரைக்கும் தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் ? அண்ணன் ஓபிஎஸ்க்காக தான் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றது என்று சொன்னால் ? அண்ணன் ஓபிஎஸ் ஆணையிடுகிறார் என்று ஆணையை ஏற்றுத்தான் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றது.

நம்மை பொறுத்த வரைக்கும் அண்ணன் மீது சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இன்றைக்கு பிறந்திருக்கிறது. திருநெல்வேலி திருச்சபையில் நடந்த சம்பவமாக இருந்தாலும் சரி,  மணிப்பூரில் நடக்கிற சம்பவமாக இருந்தாலும் சரி, மூன்று பக்கத்திற்கு நீங்கள் மணிப்பூருக்கு  கொடுத்த அறிக்கை இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற அத்தனை பேரையும் வியப்பாலே விரித்து பார்க்க வைத்திருக்கிறது.

காரணம் என்ன என்று சொன்னால் ? நாம் எல்லாம் இணைந்து நின்ற போது ஜெயின் சாமியார் இறந்தபோது அறிக்கை கொடுங்கள் என்று உங்களையெல்லாம் வைத்துக்கொண்டு நான் கேட்டபோது….  எடப்பாடி என்ன சொன்னார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்… விடுயா சும்மா எதற்கு எடுத்தாலும் சிறுபான்மை… சிறுபான்மை  என்று என்னை சீறினார்.

இன்றைக்கு தனித்து நிற்கிற போது… உள் உணர்வோடு… தர்ம சிந்தனையோடு… நியாய உணர்வோடு… மணிபூரிலே நடக்கிற சம்பவங்களுக்கு மூன்று பக்க அறிக்கை கொடுத்து…  நியாயமான ஒரு கன்னடத்தில் தெரிவித்து இருக்கிற ஒரு மாபெரும் தலைவராக  நீங்கள் உயர்ந்திருக்கிறீர் என தெரிவித்தார்.