2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த அணி வெற்றி கோப்பையை பெறும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கான qualifier 1 சுற்றில் KKR – SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் KKR 17 முறையும், SRH ஒன்பது முறையும் வென்றுள்ளது. இரண்டு அணியிலும் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்பதால் அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.