
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதலில் மோதுகிறது. தற்போது ஐபிஎல் தொடருக்காக அனைத்து வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தொடர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை ஆர்சிபி புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram