மலையாள திரை உலகில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை மற்றும் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக பாலியர் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் சங்கத்திலுள்ள சிலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள நடிகரும், சங்க தலைவருமான மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக தங்களது வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் அலன்சியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் அலர்சியர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்த மலையாள நடிகர் பாபுராஜ் மீது துணை நடிகை இடுக்கி மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.