கர்நாடகாவில் நேற்று முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு  விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். இது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கட்சி தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக செல்லும் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் ஏதோ சில காரணங்களுக்காக கமல்ஹாசனின் திமுகவுடன் நெருங்கி பழகி வருகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். இதே கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி பார்த்தால் திமுகவுடனும் கமல்ஹாசன் விரைவில் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளிப்படையாக திமுகவுடன் ஆதரவு காட்டாமல் காங்கிரஸ் மூலமாக கமல்ஹாசன் ஆதரவு காட்டி வருகிறார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியையும் கமல்ஹாசன் திறந்து வைத்ததால் காங்கிரசை விட திமுகவுடன் தான் அதிகம் நெருங்கி பழகுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.