மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர்.
தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர் படகு வாயிலாக மானை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதையடுத்து இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கடலில் தத்தளித்த மானை மீட்டு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட அந்த மானை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.