
புதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சில பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு நடந்து பாதயாத்திரையாக சென்றனர். அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் முத்துசாமி, மீனா, மோகனாம்பாள் மற்றும் ராணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன்பின் லட்சுமி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.