திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே மைசூர்-தர்பங்கா ‘பாக்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது இரவு 8.27 மணியளவில் நடந்தது, ரயில் வேகமாக சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதியதால் 2 பெட்டிகள் மேல் ஏறி நிற்கின்றன. மேலும், 12 அல்லது 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.   இதில் ஏசி பெட்டிகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தின் விளைவாக, 19 பேருக்கு  காயம் ஏற்பட்டுள்ளது.  7 பேர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  இரு பெட்டிகளில் தீப்பற்றி எரிந்தது, நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. . இதற்கிடையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருவள்ளூரிலிருந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளை வெளியேற்றியுள்ளனர்.

இப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் மீட்பு பணிகள் சிரமமாக உள்ளன. விபத்துக்கான காரணம் சிக்னல் கோளாறு என்று  என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன, மேலும் விபத்து குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணை செய்து வருகின்றனர்.