
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்து செல்வதற்கு இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை வருவதால் அதிக அளவிலான பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகிறார்கள்.