உயர்நீதிமன்ற கிளை குறவன் குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் சாதி மற்றும் பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமாக நடனங்கள் எதுவும் இல்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.