ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது..

ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க சைபர் பிரிவில் தனி பிரிவை உருவாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யவும் கோர்ட் ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி என்ற நடனங்களில் ஆபாசமான நடனங்கள் எல்லாம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க தனி பிரிவை உருவாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஜாதி பழங்குடியினரை அடையாளப்படுத்தும் நடனங்கள் எதுவும் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், அப்போதுதான் அத்தகைய சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்துவது, சிறுமைப்படுத்துவது நடக்காது என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.