தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில் தனி விமானத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றார். அவருடன் நடிகை திரிஷாவும் சென்றுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் ஒன்றாக சென்ற நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்பது தெரிய வராத நிலையில் இதன் பின்னணியும் தெரிய வரவில்லை.

ஆனால் இந்த வீடியோ தற்போது தீயாக பரவி வரும் நிலையில் எக்ஸ் களத்தில் justice for Sangeetha என்ற ஹேஷ்டேக் படு வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுடன் இந்த நேரத்தில் விஜயுடன் தனி விமானத்தில் ஒன்றாக சேர்ந்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே விஜய் மற்றும் திரிஷா குறித்து வதந்திகள் பரவும் நிலையில் சங்கீதாவுடன் விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக சேர்ந்து தனி விமானத்தில் சென்ற வீடியோ வெளியாகி இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.