இன்றைய காலகட்டத்தில் நாம் வாழ்வில் ஒரு அங்கமாக வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் பலரும் இன்ஸ்டாகிராம் செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒருவரை mention செய்வது போல வாட்ஸ்ஆப்பிலும் ஸ்டேட்டலிலும் mention செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது விரைவில் செயல்படுத்தப்படும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.