
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனகாமா என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர் பதற்றத்தில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் நிலைத்தடுமாறி சாலைக்கு அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. கார் நீருக்குள் செல்வதை கவனித்த இளைஞர்கள் சட்டென்று கதவைத் திறந்து தண்ணீரில் குதித்தனர்.
இதனை அங்கு நின்ற பொதுமக்கள் கவனித்து குளத்தில் பாய்ந்த இளைஞர்களை மீட்டு கரைக்கு கொண்டு சென்றனர். கார் முழுவதும் குளத்தில் மூழ்கியது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர்.இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கார் குளத்தில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.