
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி,எனக்கு பூரண நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு ரகசியமான ஒரு வரம் கிடைத்து இருக்க வேண்டும். ரகசியமான வரம். அந்த வரம் என்னவென்றால் ? இவர்கள் யாரைப் பற்றியே கெடுதல் நினைக்கிறார்களோ, அவர்களுக்கு நன்மைதான் நடக்கும் என்ற வரமாக இருக்க வேண்டும். ஒரு உதாரணம் இங்கே நான் இருக்கிறேன். என்னை பாருங்கள்….
நாடு திவால் ஆகிடும்:
20 ஆண்டுகளாக எனக்கு என்ன அவர்கள் செய்யவில்லை, என்னென்னவோ எல்லாம் செய்தார்கள். ஆனால் எல்லாமே எனக்கு நன்மையிலே முடிந்து இருக்கின்றது. நான் மூன்று எடுத்துக்காட்டுகளோடு இந்த ரகசிய வரத்தை நான் நிறுவ விரும்புகின்றேன். சிலர் இங்கே சொன்னார்கள் வங்கி எல்லாம் இழந்து விடும், மூடி விடுவார்கள், திவால் ஆகிவிடும், நாடு திவால் ஆகிவிடும் என்றெல்லாம் சொன்னார்கள்.
Non Performing Assets:
வெளிநாட்டிலிருந்து பெரிய அறிஞர்கள் எல்லாம் கூறி… அழைத்து வந் வந்து அவர்களை விட்டு செல்ல சொன்னார்கள். நம்முடைய வங்கிகளின் நிலைமையைப் பற்றி என்னென்னவெல்லாம் சொல்ல முடியுமோ, அதையெல்லாம் சொன்னார்கள். இவர்கள் வங்கிகளுக்கு கெடுதல் நினைத்தார்கள். ஆனால் நம்முடைய தனியார் வங்கிகள் – அரசு வங்கிகள் இன்று பிரமாதமாக இயங்குகின்றன.
வங்கிகளில் இவர்கள் Non Performing Assets பல உருவாக்கி, அதனால் வங்கிகளெல்லாம் கவிழ்ந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் அந்த Non Performing Assetsயை எல்லாம் மீறி நம்முடைய வங்கிகள் பெரிய லாபத்தை சம்பாதித்து இருக்கிறது.
இரண்டாவது விஷயம்:
ஹெலிகாப்டர் தயாரிக்கின்ற நம்முடைய கம்பெனி HAL. அதைப் பற்றி இவர்கள் என்னென்னவோ எல்லாம் சொன்னார்கள். HAL பற்றி என்னென்னவெல்லாம் சொன்னார்கள். உலக அளவில் நமக்கு நஷ்டம் ஏற்படக்கூடிய மொழியில் இவர்கள் சொன்னார்கள். ஆனால் என்ன ஆயிற்று ? HAL முடிந்துவிட்டது, இந்தியாவின் பாதுகாப்பு தொழிற்சாலை முடிந்து விட்டது என்று சொன்னார்கள்.
HAL;
ஆனால் இன்று வயல்வெளிகளிலே சென்று வீடியோ ஷூட் செய்கிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? வயல்வெளிகளில் சென்று டிராக்டர் ஓட்டுகின்ற அந்த வீடியோ ஷூட் எல்லாம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் HAL உடைய தொழிற்சாலை வாசலில், தொழிலாளர்களை வைத்து வீடியோ ஷூட் செய்யப்பட்டது. அந்த தொழிலாளர்கள் இடத்தில் உங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது, உங்கள் குடும்பம் நிர்கதி ஆகிவிடும் என்றெல்லாம் சொன்னார்கள்.
இந்த முக்கியமான இந்த நிறுவனத்தை பற்றி எத்தனை மோசமாக பேச முடியுமோ அவ்வளவு மோசமாக பேசினார்கள். இப்போது அந்த ரகசிய வரத்தை யோசித்துப் பாருங்கள். இன்று HAL மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறது. HAL இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயை ஈட்டி இருக்கிறது. இவர்களுடைய மிக சீரியஸான குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் அங்குள்ள தொழிலாளர்களை தூண்டி விட்ட பின்னரும்… இன்று HAL தேசத்தின் ஒரு முக்கிய சின்னமாக மாறிவிட்டது. இவர்கள் யாருக்கு கெடுதல் நினைக்கிறார்களோ, அவர்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள்..
மூன்றாவது ஒன்றை சொல்கின்றேன்;
எல்ஐசியை பற்றி இவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியுமா ? எல்ஐசி மூடப் போகிறார்கள்… நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எல்ஐசி யில் பணம் போட்டு இருக்கிறோம். இதைப் போல என்னென்னவோ எல்லாம் சொன்னார்கள். எல்லாவற்றையும் சொன்னார்கள். ஆனால் இன்று எல்ஐசி தொடர்ந்து வலிமையாகிக் கொண்டிருக்கிறது.
பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு இவர்கள் எந்த சர்க்காரிய கம்பெனியை திட்டுகிறார்களோ…. அந்த கம்பெனியில் எல்லாம் நாம் பணம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போகிறது என்று சொல்கிறார்களோ, அந்த அந்த நிறுவங்கள் எல்லாம் பிரகாசமாக ஒளிபடுகிறது. இவர்கள் இப்போது நாட்டை வீழ்த்தவேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஜனநாயகத்தை எதிர்க்கிறார்கள், எங்களை எதிர்க்கிறார்கள். இந்த நாடும் வளர்ச்சியடைய போகிறது, இந்த ஜனநாயகமும் வலுப் பெற போகிறது. நாங்களும் வலுப்பெற போகிறோம் என தெரிவித்தார்.