7வது ஊதிய குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு பயண சலுகை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய அரசு ஊழியர்கள் LTC இன் கீழ் ரயில் பயணம் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது சில சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சிவில் சேவைகள் விதிகள் 1988ன் கீழ் திருத்தும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த DoPT வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி விடுப்பு பயண சலுகையின் கீழ் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களில் கேட்டரிங் கட்டணத்தை மத்திய அரசு ஊழியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் விமான நிறுவனங்கள் விதிக்கும் ரத்து கட்டணங்கள் மற்றும் மூன்று அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (IRCTC, BLCL, ATT) தங்கள் தளத்தைப் பயன்படுத்துவதற்காக விதிக்கப்படும் ரத்து கட்டணங்களையும் திருப்பிச் செலுத்தும் வசதியை அரசு வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.