ஆந்திர  மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கூடுதல் சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்  50% உத்திரவாத ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும், ஊழியர்களின் வருடாந்திர கொடுப்பனைவுகளின் பற்றாக்குறை நிரப்புவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், பணவீக்கம் அடிப்படையில் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.