
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் வெற்றி பெற்றது தொடர்பாக இந்திய முப்படைகளின் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், பாகிஸ்தான் கிராணா மலையில் அமைந்துள்ள அணு ஆயுத மையத்தை தாக்கியதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, “அணு ஆயுத மையம் கிராணா மலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்ததற்கு நன்றி. அங்கு அணு ஆயுதம் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. அந்தப் பகுதியில் நமது விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை” என்று பதிலளித்தார்.