இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “ஜெயிலர்”. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஜினியின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.