தமிழ் திரையுலகில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2006-ம் வருடம் ஸ்ரீ வித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஸ்ரீவித்யா தன் இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் பல நபர்களை சந்திக்க மறுத்து விட்டாராம். அதே நேரம் இவருக்கு கடைசி ஒரு முறையாவது கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். ஸ்ரீ வித்யாவின் நிலை குறித்து அறிந்த கமல்ஹாசன் உடனே அவரை சந்தித்துள்ளார். நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்ரீ வித்யாவை பார்த்து கமல் கண்ணீர் விட்டு அழுததாக சொல்லப்படுகிறது.