அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கணேசன் என்பவரது காளை பங்கேற்றது. இந்நிலையில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை வீட்டிற்கு திரும்பாததால் கணேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இந்நிலையில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை நடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதி காளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.

இதுகுறித்து அறிந்த கணேசனும், அவரது உறவினர்களும் காளைக்கு உரிய இழப்பீடு வாங்கித்தந்து, டிரைவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.