90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் ஜாக்கிசான் ஜாக்கிசானின் சண்டைக் காட்சிகளுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அவரது நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கராத்தே கிட் இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை புரிந்தது.

இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு கராத்தே கிட் லெஜென்ட்ஸ் திரைப்படத்தில் ஜாக்கிசான் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.