தமிழகம் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மூலமாக ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தினசரி 40 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணம் செய்து பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பேருந்துகளை பராமரிப்பதற்கு சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் டிப்போக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவினர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் அவ்வப்போது தொழில் பழகுநருக்கான பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐடிஐ தொழில் பயிற்சி பழகுநர் பயிற்சி பெற தகுதியான மோட்டார் வாகன மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிட்டர், பெயிண்டர் ஆகிய பணிகளுக்கு தமிழக மாணவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் இரண்டாம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழில் பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.