
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து 3 நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தியா அதன் சொந்த மண்ணில் முழுவதுமாக தோற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். துணை கேப்டனாக பும்ரா பதவி வகிக்கிறார். இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா கிரிக்கெட் விளையாட்டில் தனது கடைசி பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பதால் அடுத்ததாக சரியான கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியதாவது, அடுத்ததாக வரப்போகும் ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் தொடரில் இந்தியாவில் சிறப்பாக விளையாடாவிட்டால் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். அவர் ஏற்கனவே டி20 இல் ஓய்வு பெற்று விட்டார். இந்தியா முழுமையாக தோற்றதற்கு தானே முழு பொறுப்பு என ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டார்.
இதை அவர் தைரியமாக எதிர்கொண்ட விதமும் பாராட்டுக்குரியது. அடுத்து வரும் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா சிறப்பாக செயல்படும். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது திறமைகளை ஆஸ்திரேலியா மண்ணில் காட்டுவர். இவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.