திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரபல பேச்சாளரும், முக்கிய பொறுப்பில் இருப்பவருமான தமிழன் பிரசன்னா, கலைஞரை போல… அவருடைய வாழ் நாள்களில் கலைஞர் ஒரு இடத்துல தொட்டுட்டு போவாரு… நம்ம 2k kids காலம்…. 90’s kids காலதுக்குவரப்ப…  கலைஞர் ஒரு வசனம் எழுதுகிறார். தன் காதலியை பார்த்து எழுதுகிறார்…

உன்னை ரூபாய் நோட்டு போல பெட்டியில் பதுக்கி பத்திரமாய் வைத்திருந்தேன். நீ சில்லறையாக தெருவிலே போய் நின்றாயே என்று வசனம் எழுதி இருப்பாரு. கலைஞரை போல சிந்தித்த இந்த சமூகத்திற்காக… அண்ணன் நாகலிங்கம் பேசுகிற பொழுது சொன்னாரே, நாம்  எந்த மேடையில் பேசுகிறோம்… கோவில்கூடாது என்பதற்கல்ல,  கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக. அதுக்கு அடுத்து ஒரு வசனம் சொல்லிருப்பாரு…

அந்த பூசாரி அம்பாளிடத்தில்  ஓடுவான். அம்பாளே என்னை காப்பாற்று, அது என்றைக்கடா பேசிருக்கிறது.  அது வெறும் கல் என்று சொல்லுகிற திராணி, தெம்பு, துணிச்சல், கலைஞரின் எழுதுகோளுக்கு மட்டும் தான் இருந்தது நண்பர்களே….  அவரைப்போல இந்த மக்களுக்கு சிந்தித்தவன் யாரும் இல்லை

பராசக்தியில் கடைசியில்..  குணசேகரனுடைய அண்ணன் வந்து எல்லாரும் குடும்பமாக சேர்ந்து விட்டோமே,  வாருங்கள் நாம் போவோம் அப்படினு போகிற போது,  ஒரு வரி சொல்லுவார். எங்கே அண்ணா போகிறாய் ? எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டோமே வா, இதுதான் உன் வீடு அப்படின்னு ஜட்ஜ் அண்ணன் வந்து சொல்லும்போது, 

சொல்லுவாரு… இந்த மாடமளிகை கோபுரங்கள் எங்களுக்கு தேவையில்லை.  நீங்கள் இல்லாத போது என்னோடு இருந்து தோழர்கள், இந்த பிச்சைக்கார தோழர்கள் தான். அடுத்த மாதம் பிச்சைக்காரர்களுக்கான மறுவாழ்வு மாநாடு நடத்த போகிறோம். அதற்கு நிதி திரட்ட போகிறோம் என்ற ஒரு வசனத்தை சொல்லி இருப்பார் என தெரிவித்தார்.