இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் என்பது தொடர்கதையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இன்றைய தினம் திடீரென்று போர் மேகம் சூழ்ந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எப்படி கச்சதீவு  இருக்கின்றதோ அப்படி ஒரு பொதுவான ஒரு பகுதியாக காசா பகுதி  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே இருக்கின்றது.இரண்டு நாடுகளும் இதனை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இஸ்ரேலுக்கு எதிராக போர் பிரகடனம் செய்திருக்கிறது ஹமாஸ் என்ற அமைப்பு. ஹமாஸ் அமைப்பை பொறுத்த வரையிலே இஸ்ரேல் அதை ஒரு தீவிரவாத அமைப்பாக பார்க்கிறது. காசா பகுதியை கைப்பற்றுவதற்காக தான் இந்த பிரச்சனை நடைபெற்று வருகிறது. இந்த காசா பகுதி என்பது தன்னாட்சி பெற்ற ஒரு பகுதியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையிலே அமைந்திருக்கின்றது. எனவே இரண்டு நாடுகளும் இதை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று தீவிரமாக தாக்கி வருகின்றார்கள்.

பாலஸ்தீனத்தை பொருத்தவரையில் அங்கே பல்வேறு தீவிரவாத குழுக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அதில் இருக்கக்கூடிய பிரதான, பெரிய , அதிகமான ஆயுதங்களை கொண்டு செயல்படக் கூடிய ஒரு குழு என்றால் ஹமாஸ் என்று சொல்லக்கூடிய அந்த குழு. எனவே இவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்று பல ஆண்டுகளாக  இஸ்ரேல் நாட்டில் இருக்கக்கூடிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். குறிப்பாக இன்று காலையில் 5000 ஏவுகணைகளை அவர்கள் ஏவி கடுமையான சேதத்தை இஸ்ரேல் மீது நடத்தி இருக்கிறார்கள். ஹமாஸ் அமைப்பை பொறுத்தவரை ஒரே நேரத்தில் தரை, கடல், ஆகாயம் என மும்முனை தாக்குதலை தொடங்கி இருக்கின்றது. எனவே இந்த தாக்குதல் என்பது உலக அரங்கிலே மிகப்பெரிய பேச பொருளாக மாறி இருக்கின்றது.

ஏற்கனவே உக்கரை மற்றும் ரஷ்யா போர் என்பது உலக அரங்கில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே ஐநா  உள்ளிட்ட அமைப்புகள் போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும். எந்த நாடுகளும் உலகில் போர் செய்யக்கூடாது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் இந்த இரு நாடுகள் இடையான போர் என்பது போர் தீவிரமடையுமோ என்ற அச்சத்தை உருவாக்கி இருக்கின்றது.

அதே நேரத்தில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை கூட நாங்களும் போருக்கு தயாராக இருக்கிறோம். எங்களது படைகளை தயார் செய்து விட்டோம். இதை நாங்கள் பொறுத்து இருக்க போவதில்லை. எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி எங்கள் நாட்டில் எல்லைக்குள் புகுந்து இந்த போரை நடத்த இருக்கின்றார்கள்  என குற்றம் சட்டி வருகின்றது. இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் 35 பேரை ஹமாஸ் குழுவினர் பிடித்து சென்றதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் மக்கள் பாதுகாப்பு இருக்க மேயர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகரில் அவசரநிலை  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  ஜெருசலேம் நகரில் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை உணர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.