
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்களும் அவர் விளையாடிய வீடியோ தொகுப்பை எடிட் செய்தும் அவர் பேசுவதை எடிட் செய்தும் பல காணொளிகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அவர்களின் வெளிநாட்டு ரசிகராகும் பிரபல யூட்யூப் பிரபலமான ஸ்பீட் விராட் கோலி மனைவி குறித்து தெரிவித்த ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி தொடர்பான வீடியோக்களை கண்டு அதற்கு ரியாக்ஷன் கொடுப்பது உள்ளிட்ட காணொளிகளை ஸ்பீட் தனது youtube தளத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வீடியோ ஒன்றில் விராட் கோலியின் தாயைப் பார்த்து இது விராட் கோலியின் அம்மா எனவும் அனுஷ்கா அவர்களை கண்டதும் அவரை விராட் கோலியின் மனைவி என்று கூறாமல் தங்கை எனக்கூறி இருப்பது பெரும் பேசும் பொருள் ஆகியுள்ளது. கமெண்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் இதுகுறித்து கலாய்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.