சாமானிய மக்கள் தங்களது செலவுக்காக அவ்வபோது வங்கியில் நகைகளை அடகு வைக்கின்றனர். வட்டியுடன் அசலை கட்ட முடியாத மக்கள், அடகு வைக்கும் நகைகளை ஒவ்வொரு ஆண்டும் வட்டி மட்டுமே கட்டி மறு அடகு வைக்கின்றனர். ஆனால் தற்போது RBI வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

அதாவது வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழு பணமும் செலுத்தி திருப்பி விட்டு, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் கந்துவட்டிக்கு பணம் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.