நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் கட்சியினர் 20 பேரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சீமான் டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒரு பதிவை போட்ட சில நிமிடங்களில் அவருடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். கருத்தை கருத்தால் அறம் கொள்வதே சிறந்தது என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சட்ட கோரிக்கையை ஏற்று சீமான் உட்பட சிலரின் twitter கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக twitter நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என அவர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் செங்கோல் வைத்து அற முறையில் ஆட்சி செய்ய போவதாக கூறிவிட்டு கருத்து சுதந்திரத்தை கூட பறிக்கிறார்கள் என சீமான் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.