சாமி திரைப்படத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவின் சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இவர் 1942 ஆம் ஆண்டு ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவர். இவர் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிராணம் காரீடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், சுமார் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சாமி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதைத்தொடர்ந்து திருப்பாச்சி, குத்து, சத்தியம், கோ, சாமி 2, காத்தாடி போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு குணசத்திர நடிகர், துணை நடிகர், சிறந்த வில்லன் என பல பிரிவுகளில் 9 நந்தி விருதுகளை பெற்றுள்ளார்.அதோடு கடந்த 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இந்நிலையில் சில காலமாக உடல் நலக்குறைவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக தற்போது அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் சீனிவாச ராவ் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் உடல் நலிந்த நிலையில் காணப்படுகிறார் கால்களில் புன்னுடனும் புண்களுடனும் கட்டுப்போட்ட நிலையில் காணப்படுகிறார் அவர் விரைவில் உடல்நிலை குணமடைந்து வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றன