மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியிலான அரசு நடைபெற்று வருகிறது. இங்கு முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸ் உள்ளார். இந்த கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் உள்ளது. இவர்கள் இருவரும் அங்கு துணைத்தலைவராக உள்ளனர். இந்நிலையில் புனேவில் ஆராய்ச்சி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினரான சரத்பவாரும், அஜித் பவாரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு இடையே இருவரும் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர். தனி அறையில் நடைபெற்ற இந்த சந்தர்ப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் எது எதுவும் தெரியவில்லை.

இந்த இரு பிரிவுகளும் இணைய வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சந்திப்பாகும். தேசியவாத காங்கிரஸின் தலைவராக இருந்தவர்தான் சரத்பவார். இவரது அண்ணன் மகன் தான் அஜித் பவார். அஜித் பவாருக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கிய சரத் பவார் அவரை முழுமையாக நம்பினார். இதற்கிடையில் அஜித் பவாரின் பதவிகளை பறித்து அதை முழுவதுமாக தனது மகள் சுப்ரியா சுலேவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சரத் பகார் கட்சியை இரண்டாக உடைத்து விட்டு வெளியே வந்தார். அதோடு அதிகபட்ச எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.