பாடகி கெனிஷா சமீபத்தில் பிரான்சிஸ் சென்றார். அங்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் நிலையில் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று அவரை குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக இணைத்தளத்தில் வதந்திகள் பரவி வருகின்றது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டிகளில் கெனிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் கர்ப்பமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் கிடையாது. அதேபோன்று நான் கர்ப்பமாகவும் இல்லை என்று தெரிவித்தார். சமீபத்தில் தனது இசை வீடியோ ‘அன்றும், இன்றும்’ ல் இருந்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலர் தான் கர்ப்பமாக இருப்பதாக இணையதளத்தில் கூறி வருகின்றனர்.