தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் மார்ச் 30-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கும் நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஹீரோயினை தற்போது படக்குழு தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகைகள் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, திஷா பதானி ஆகியோரை பட னக்குழு தேர்வு செய்துள்ளதாகவும் இதில் ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் 3 பேரும் சிம்புவுடன் முதல் முறையாக ஜோடி சேரும் ஹீரோயின் என்பதால் யார் ஹீரோயினாக நடித்தாலும் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.