அமெரிக்காவில் மின்சாரவாகன ஊக்கு தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததால், ட்ரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி உருவாக்குவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை தொடங்கியுள்ளார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட பதிவில், தன்னை பின்தொடர்பவர்களிடம், உண்மையில் 80% நடுத்தர மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் புதிய கட்சி நிறுவ வேண்டிய நேரம் இதுவா? என கேள்வியை கேட்டுள்ளார்.

அந்த கருத்துக்கணிப்பு கேள்விக்கு, 81% மக்கள் அந்த யோசனை சரி என ஆதரித்துள்ளனர். மேலும் அந்தப் பதிவு 4.1 மில்லியனுக்கும் அதிகமாக பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.