
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அதில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனாலும் எதுவும் கிடைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரை தனி அறையில் வைத்து சோதனை நடத்திய நிலையில் அவர் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல் போன்ற மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்திருப்பது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் கேப்சூல்களை வெளியே எடுக்க அந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து அந்த கேப்சூல்களில் உள்ள போதை பொருள்களின் மதிப்பு 10 கோடியே 96 ஆயிரம் லட்சம் ஆகும். மேலும் அந்த பெண்ணை கைது செய்து வழக்கு பதிவு செய்து போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கடத்தி வந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.