அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் அன்னைக்கெல்லாம் எந்த வசதியும் கிடையாது. அப்பத்தான் முதல் முதல்ல கேசட் வருது,  டிவி வருது. அதுல என்ன தெரியுங்களா..?  கலைஞர் கருணாநிதி ஒரு எதிர்க்கட்சித் தலைவர்…  ஒரு கட்சியினுடைய தலைவர்.. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து நிற்கின்ற கட்சி,  நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்றாரு கலைஞர்…

கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா ?  தமிழ்நாடு முழுவதும்  போனாரு. எங்கும் வரவேற்பு இல்லை…  ஏனென்றால் எம்ஜிஆர் பத்தாயிரம் மைலுக்கும்  அங்கு படித்துக் கொண்டு இருந்தாலும்,  எங்கு பார்த்தாலும் மக்கள் எம்ஜிஆரை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார். எம்ஜிஆருக்காக… புரட்சித் தலைவருக்காகவே ஆலயங்கள் தோறும் வழிபாடு. பார்த்தார்  கருணாநிதி… போட்டார் வேஷம்…

அவர்களுக்கு நடிப்பு என்பது சாதாரணம்…  பதவிக்காக மானம், ரோஷம்,  எதுவும் இல்லாத குடும்பம்னா…  அது கலைஞர் குடும்பம். அது இன்றைக்கும் தொடர்கிறது. புரட்சித் தலைவரை பார்த்து கட்சி தொடங்கும் போது சொன்னார்….  இரண்டு கேரளா தமிழகத்தில் வராது. தமிழகத்தில் தமிழகம் தான் இருக்கும். இவர் கேரளத்தை சேர்ந்தவர்…  தமிழக மக்கள்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என சொல்லி எல்லாம் பார்த்தார்.

புரட்சித் தலைவரை ரொம்ப இழிவாக எல்லாம் பேசினாரு. அதே வாய்… அதே நாக்கு… தேர்தலில் பார்க்கிறார்.  பார்த்தவுடனே…  தன்னை மாற்றிக் கொள்கிறார். என் ஆருயிர் நண்பர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்….  புரட்சித்தலைவர் பாருங்க எப்படின்னு…. என்  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்… என் ஆருயிர் நண்பர்…. பாழாய்ப்போன  அரசியல் என சொன்னாரு. கலைஞர் நடிப்பில் சிவாஜி எல்லாம் தோத்து போகணும்.. பாழாய்ப்போன அரசியல்,  எங்களை பிரித்து விட்டது. ஒரே  தட்டில் தாய் போட்ட சோத்தை நாங்கள் இருவரும் சாப்பிட்டோம். சத்யா தாய் போட்ட சோத்தை நாங்கள் இருவரும் சாப்பிடுவோம். அப்படி இருந்த எங்களை பாழாய்  போன அரசியல் பிரித்து விட்டது.

தமிழக மக்களே.. எனக்கு ஓட்டு போடுங்க. எப்படி கேக்குறாரு பாருங்க ?  எவனாச்சும்… கேட்பானா?  மானம், ரோசம், வெட்கம், எல்லாத்தையும் விட்டுட்டு கேட்டவர் தான் கலைஞர். இல்லை என்று மறுக்க முடியாது.   கலைஞர் கேட்டார்… மக்கள் பார்த்து கேட்டார்.. எனக்கு வாக்களியுங்கள்…. என்னை வெற்றி பெற செய்யுங்கள்… எம்ஜிஆர் இப்ப உயிரோடு இல்ல, அவர் பொம்மையா வச்சிருக்காங்க. இங்க இருக்கிறவுங்க சும்மா ஆட்டி படைக்கிறாங்க.. அமைச்சர்கள் சும்மா ஏமாத்துறாங்க. அப்ப எல்லாம் டிவி இல்ல.. உடனே அவர் சொன்னாரு… என் நண்பர் வந்த உடனே….  அப்படியே முதலமைச்சர் பதவியை அவரிடம் தூக்கி கொடுத்துடறேன்… எவனாச்சும் சொல்லுவானா என விமர்சனம் செய்தார்.