இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருக்கிறார். மற்றொரு வாலிபர் சாக்கடைக் குழியின் மேல் உள்ள இரும்பாலான மூடியை திருட முயற்சி செய்கிறார். அப்போது அந்த மோடியை எடுத்து தனது தோள் மீது வைத்து நடக்க முயற்சி செய்கிறார்.

 

ஆனால் அவரே அந்த சாக்கடை குழிக்குள் விழுகிறார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்படுகிறது. இதையடுத்து அவரால் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் உட்கார முயற்சி செய்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.