பீகாரில் 18 வயதான மித்லேஷ் மஞ்சி என்ற இளைஞர், IPS அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில், அவர் மனோஜ் சிங் என்ற நபரிடம் ₹2 லட்சம் கொடுத்து IPS அதிகாரி ஆனதாக கூறியுள்ளார். இளைஞன், “நான் IPS அதிகாரி” எனக் கூறி, அதிகாரத்துடன் பொதுமக்களிடம் நடந்து கொண்டுள்ளார்.

கைதான போது, மித்லேஷ் மஞ்ஜியிடம் இருந்து போலீஸ் சீருடை மற்றும் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் போலீஸ் வாகனங்களை பயன்படுத்தியதோடு, அதிகாரத்தின் பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு காவலர் “வாங்க சார்” என நகைச்சுவையாக அழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.