ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது டிரெஸ்ஸிங் ரூமில் மின்-சிகரெட் பயன்படுத்தியது கேமராவில் சிக்கியது. கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைக் குறைக்கும் வகையில் செயல்பட்டதற்காக அவருக்குப் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.

முன்னதாக, கள நடுவர்கள் இது குறித்து புகார் அளிக்காத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களைக் கண்ட பின்னரே மேட்ச் ரெப்ரி அமித் சர்மா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்தியாவில் 2019-லேயே மின்-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பொறுப்பான கேப்டனாக இருந்து கொண்டு பராக் இப்படிச் செய்தது ரசிகர்களிடையே கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. லெவல் 1 விதிமீறலின் கீழ் அவருக்கு ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.