IPL 18 ஆவது சீசனானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கான், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன்  விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் 2025 தொடக்க விழாவை ஒரு நடன நிகழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஸ்ரேயா கோஷல், திஷா பதானி மற்றும் கரண் அவுஜ்லா ஆகியோரின் நடன நிகழ்ச்சி முடிந்ததும், ஷாருக்கான்  மேடைக்கு சென்றார். அவர்  விராட் கோலி மற்றும் ரிங்கு சிங்கை அழைத்து சில வேடிக்கையான கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஷாருக்கான் ‘டங்கி’ படத்தின் ஒரு பாடலில் ரிங்கு சிங்குடன் நடனமாடச் சொன்னார். இதனையடுத்து அவரும்  விராட் கோலியும் ‘ஜூம் ஜோ பதான்’ நிகழ்ச்சியில் நடனமாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.