நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 73 ரன்கள் அடித்திருந்த வேலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 49 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 36 பந்துகளை சந்தித்து அவர் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 49 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடரில் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்கு என்ன காரணம் என்பது குறித்து சாய் சுதர்சன் கூறியுள்ளார் .

அதாவது, “ஐபிஎல் தொடர் என்னுடைய நான்காவது ஆண்டு. நான் கடந்த சில வருடங்களாகவே கற்றுக்கொண்ட அனுபவத்தால் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு நான் சிறப்பாக பேட்டிங் செய்ய என்னுடைய அணி வீரர்களோடு இணைந்து நிறைய வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் எங்களுடைய அணியில் இருக்கும் பெயரில் அவர்களுக்கு எதிராக வலை பயிற்சி நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறேன். அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக நீண்ட நேரம் வலைப் பயிற்சி எடுப்பது எனக்கு  உதவுகிறது. கடந்த மூன்று வருடங்களில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதை வைத்து தான் தற்போது மிகச் சிறப்பாக விளையாடிய வருகிறேன்” என்று கூறியுள்ளார்.