விராட் கோலியின் பாதங்களை தொட்டு ரிங்கு சிங்  சல்யூட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

ஐபிஎல் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் சல்யூட் தெரிவித்துள்ளார். இந்த காட்சி ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்று புதன்கிழமை சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 2023 ஐபிஎல் 36வது லீக் போட்டிக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வெற்றி பெற்ற பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) வீரர் ரிங்கு சிங் விராட் கோலியின் காலை தொட்டார்.

இதையடுத்து ரிங்குவை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார் கோலி. போட்டி முடிந்ததும், இரு அணி வீரர்களும் கைகுலுக்கியபோது, ​​எதிர்பாராதவிதமாக விராட் கோலியின் காலைத் தொட்டு சல்யூட் செய்தார் ரின்கு சிங். கோலி ரிங்குவின் தோளில் தட்டினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற ஆட்டம் இது. கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 179/8 என்ற ஸ்கோர் மட்டுமே எடுக்க முடிந்தது. 201 ரன்கள் என்ற அபார வெற்றி இலக்கை துரத்தி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலி (37 பந்துகளில் 54), மஹிபால் லோமர் (18 பந்துகளில் 34) ஆகிய இருவரை தவிர மற்ற யாரும் பிரகாசிக்கவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 83 ரன்கள் சேர்த்தது. 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நாராயண் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தி  ஆர்சிபிக்கு வைஷாக் விஜய்குமார் முதல் பிரேக் கொடுத்தார்.

அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜேசன் ராயும் வைஷாக் விஜய்குமாரால் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 29 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்தார். தான் சந்தித்த 22வது பந்தில் ராய் அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோர் கொல்கத்தாவை முன்னோக்கி கொண்டு சென்றனர். நிதிஷ் ராணா 21 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 48 ரன்கள் எடுத்து ஹசரங்கா ஓவரில் அவுட் ஆனார். தொடர்ந்து அதே ஓவரில் வெங்கடேஷ் ஐயரும் (26 பந்துகளில் 31 ரன்கள்) ஆட்டமிழந்தார். 2 விக்கெட்டுகளையும் ஹசரங்கா கைப்பற்றினார். ரிங்கு சிங் (10 பந்துகளில் 18 நாட் அவுட்), டேவிஸ் வைஸ் (3 பந்துகளில் 12 நாட் அவுட்) ஆகியோரின் விரைவு ஸ்கோரால் கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எட்டியது.

https://twitter.com/Cheekuxdee/status/1651473137530462209