
ஐபிஎல் 2024 RCB அணி தொடக்கத்தில் பல தோல்விகளை சந்தித்து பிளே ஆப் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்து பின் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று தற்போது மே 18ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். ஆர் சி பி அணி ஐபிஎல் – ல் வெற்றி பெறுவது குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் RCB அணி வெற்றி பெற்று இசாலா கப் நம்தே என்ற முழக்கத்தை உண்மையாக்க வேண்டுமானால் ஆர் சி பி நிர்வாகம் அந்த அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு சீசனிலும் வெளிநாட்டு வீரர்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் ஆர் சி பி அணி எதிர்காலத்திலாவது இந்திய வீரர்களுக்கு செலவு செய்ய வேண்டும் அப்போதுதான் கோப்பை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.