செய்தியாளர்களை சந்தித் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்றைக்கு அமலாக்க துறையிலே……. மாநில அரசாங்கம் உள்ளே நுழைந்து,  லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே நுழைந்து சோதனை செய்திருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. மாநில அரசாங்கம் உத்தமரும் கிடையாது.இவர்கள் அமலாக்க துறையின் மீது பழி போடுகிறார்கள்…. பழிவாங்குகிறார்கள்….

எங்களை அச்சப்படுத்துகிறார்கள் என்று சொல்லுகின்ற இவர்கள் என்ன செய்தார்கள் ? லஞ்ச ஒழிப்புத்துறை வைத்துக் கொண்டு எதிர்கட்சியான எங்களை அடக்கலாம், ஒடுக்கலாம் என்று இருக்கின்றார்கள்…  அதே தான், உனக்கு வந்தால் ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ? குற்றம் யார் செய்திருந்தாலும் தவறு தவறுதான்…. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை…..  ஆனால் ED அலுவலகம் உள்ளே லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்தது  சந்தேகத்தை கிளப்புகிறது.

ஏனென்றால் அமலாக்கத்துறை தமிழகத்தின் அமைச்சர்கள் உட்பட உயர் மட்ட மாவட்ட ஆட்சியர் தலைவர் உட்பட…..  அரசு செயலாளர் உட்பட….. பல்வேறு நபர்களை விசாரணை உட்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை முதலமைச்சர் உடைய இல்லத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்பதற்காக…  அமலாக்கத்துறை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக,  இந்த சோதனை நடைபெற்று இருப்பதாக ஒரு நியாயமான சந்தேகம் இருக்கிறது என தெரிவித்தார்.