இயற்கை பேரிடர் குறைப்புக்கான சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் பேரழிவுகளுக்கும், சமத்துவமின்மைக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்கிறது. அதாவது பேரழிவுகளும் சமத்துவமின்மையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கருதப்படுகிறது. பேரழிவுகளின் விளைவுகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகமாகி ஆபத்தில் இருப்பவர்களை மேலும் வறுமையில் தள்ளுகிறது.

இயற்கையாகவும் மனிதனின் கவன குறைவினாலும், தீவிரவாத செயல்களாலும் இன்னல்கள் ஏற்படுகிறது. இயற்கையாக ஏற்படும் பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்றவற்றின் மூலம் ஏற்படும் பேரழிவுகள் இயற்கை பேரழிவுகள் என அழைக்கப்படுகிறது.

நீரின் சிற்றம் காரணமாக வெள்ளம், நிலத்தில் சீற்றம் காரணமாக நிலநடுக்கம், நெருப்பின் சீற்றம் காரணமாக எரிமலை வெடிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணுகிறான்.

அதன் விளைவாக கவன குறைவு ஏற்பட்டு தீ விபத்து, சாலை விபத்து, கட்டிட விபத்து, ஆகாய விமான விபத்து, மின்சார விபத்து, தீவிரவாதத்தால் ஏற்படும் போர், வெடிகுண்டு அணுகுண்டு ஏவுகணை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் ஏற்படுகிறது. மேற்கூறியவை மனிதனால் ஏற்படும் பேரழிவு ஆகும். இயற்கை பேரிடர் குறைப்பு சர்வதேச நாள் பேரழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.