
மகாராஷ்டிரா மாநில அரசு, நாட்டு பசுமாடுகளை “ராஜமாதா”வாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளை நாட்டு மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகவும், ஆன்மிகம், அறிவியல் மற்றும் சமூகத்தில் ஆழ்ந்த தொடர்புடையவையாகவும் இருந்துள்ளன. மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம் உணவில் ஊட்டச்சத்து அதிகரிக்கலாம் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பசுக்கள் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கவனத்தில் கொண்டு, விவசாயிகளை மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கிறது. இதன் மூலம், பசுக்களைப் பாதுகாக்கவும், விவசாயத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
பசுக்களை புனிதமாகக் கருதும் வட இந்திய மாநிலங்களில் பசுக்களின் மதத்தன்மை அதிகம் பேசப்படுகின்றது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு தேர்தலை முன்னோக்கிய அரசியல் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.